மெய்ப்பொருள் ஒளி இன்னாரின் பெண் அன்று, இன்பத்தின் வடிவம் அன்று, அன்னாரின் மனைவி அன்று அருளின் நிழலும் அன்று. இவர்களின் அன்னை அன்று , இயல்பின் பெயரும் அன்று, அவர்களின் தங்கை அன்று , அடையாளம் ஒன்றும் அன்று. ஒற்றை உயிராய், நானெனும் பெயர் நீங்கி, உற்றது உடைமையெல்லாம் ஒழிந்தே, வெயிலின் வெம்மைத் தணிக்க வானம் பொழியும், மயிலையின் கயிலையில் கால்பதித்து நின்றே. கற்பகவல்லியும் கபாலியும் கணபதியும், மனம்கவர் செந்தில்வாழ் செழுமணிவண்ணனும், பெயரும் உருவமும் இன்றிப் பேரின்பச் சுடராய், உயரிய பெருஞ்சுடர் ஓங்கார வடிவாய் விளங்கும். அங்கிருக்கும் ஒளியே இங்கும் மிளிரும், அன்பாய் பொங்கும், சத்தாய் பூரிக்கும், எங்கும் எதிலும் ஒருமை நிறைந்து, மங்காத ஆனந்த மெய்ப்பொருளே! Radiance of the Real Not as someone's daughter, nor as the image of pleasure; Not as someone's wife, nor as. shadow of grace. Not as a mother, nor bound by name and form, Not as a sister nor as any known identity. When 'Me and Mine' dissolved, and all possessions faded away, As rain cools the heat of Chennai, I stepped at the te...
This blog will have poems of Advaita Vedanta