“May Satyavān never be parted from me.”
I, a seeker of Truth, (Sat) pray thus:
May the “True Self” never seem apart from me.
May the truth never depart from me,
May I never depart from the truth.
May these limbs never move away from truth.
May these eyes behold only the truth.
May these ears receive only the truth.
May this tongue speak only the truth.
May the mind never wander from truth.
May the intellect never hallucinate away from truth.
May the ego never rise in pride against truth.
Let every breath remember the truth.
Let every thought return to truth.
Let all that I am abide in truth.
இன்று சாவித்திரி சத்யவான் பிரியாதிருக்க வேண்டியதை நினைக்கிறேன்.
சத்தியத்தைத் தேடும் நான் வேண்டுவது இது:
சத்தியமான “நான்” எப்போதும்
என்னை விட்டு விலகுவது போல் தோன்றாமல் இருப்பதாக.
சத்தியம் என்னை விட்டு நீங்காதிருப்பதாக.
நான் சத்தியத்தை விட்டு நீங்காதிருப்பதாக.
இந்த அங்கங்கள் சத்தியத்தை விட்டு விலகாதிருப்பதாக.
இந்த விழிகள் எப்போதும் சத்தியத்தையே காண்பதாக.
இந்த செவிகள் எப்போதும் சத்தியத்தையே கேட்பதாக.
இந்த நாவு எப்போதும் சத்தியத்தையே பேசுவதாக.
இந்த மனம் எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருப்பதாக.
இந்த புத்தி எப்போதும் சத்தியத்தை விட்டு அலையாதிருப்பதாக.
இந்த அகங்காரம் சத்தியத்திற்கு எதிராக எழாதிருப்பதாக.
ஒவ்வொரு மூச்சும் சத்தியத்தை நினைவில் கொள்க.
ஒவ்வொரு எண்ணமும் சத்தியத்தை நோக்கியே திரும்புக.
எல்லாமாகிய நான் சத்தியத்திலேயே நிலைத்திருப்பதாக.

Comments
Post a Comment